இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக சீனாவை விட்டு வெளியே வந்த அதிபர் ஜி ஜிங்பிங்

0
252

சீனா அதிபர் ஜி ஜிங்பிங் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மெயின்லேன்ட் சீனாவை விட்டு வெளியே வந்து, ஹாங்காங்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் அரசிடம் இருந்து ஹாங்காங்கை சீனா பெற்றுக்கொண்டதன் 25 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி ஜிங்பிங் ஹாங் காங்க் வந்துள்ளார்.

2020ஆம் ஆண்டு கோவிட்-19 பரவலுக்குப் பின் சீனா தேசத்தை விட்டு ஜி ஜிங்பிங் வெளியே வருவது இதுவே முதல் முறை. தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்க் காங்க் கருதப்பட்டாலும், அதன் தனிப்பட்ட உரிமைகளை சீனா மெல்ல பறிந்து சீனாவின் ஒரு அங்கமாகவே ஹாங்காங்கை மாற்றி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில், அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான அரசு ராணுவத்தை வைத்து போராட்டக்காரர்களை ஒடுக்கியது. இத்தகைய பின்னணியில் ஜி ஜிங்பிங், தனது மனைவி பிங் லியூவானுடன் ஹாங்காங்க் வந்துள்ளார். இருவருக்கும் ஹாங்காங்க் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாங்காங்கின் பிரீமியர் காரி லாம் அவரது குடும்பத்தினருடன் வந்து ஜி ஜிங்பிங்கிற்கு வரவேற்பு தந்தனர்.

பின்னர் பேசிய அதிபர் ஜி ஜிங்பிங்,பல்வேறு சோதனைகளை தாண்டி ஹாங் காங்க் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது. புயல்,மழை ஆகியவற்றை தாண்டி, சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழுந்து நிற்கிறது ஹாங் காங்க் என புகழாரம் சூட்டியுள்ளார்.2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் சீனாவின் ஜி ஜிங்பிங் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமலாக்கப்பட்டு இரு வருடம் நிறைவடையும் வேளையில் ஹாங்காங்கிற்கு வருகை தந்துள்ளார் ஜி.

இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங்கின் தனியுரிமைக்கு எதிரானது என அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் 2019ஆம் ஆண்டில் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தை தனது ராணுவ, காவல்துறை பலம் கொண்டு சீனா முடக்கியது. தற்போது ஜி ஜிங்பிங் வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleமணிப்பூரில் பயங்கர நிலச்சரிவு – 20க்கும் மேற்பட்டோர் பலி, பலர் மாயம்
Next articleநடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய அரபு அமீரகம்