விக்டோரியாவில் பால் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால், பால் தொடர்பான பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
13 பணியிடங்களில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல வேலை நிலைமைகளின் அடிப்படையில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை சமீபத்தில் தொடங்கினர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பால் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜோன் வில்லியம்ஸ், இது தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் வரை வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பால் தொடர்பான உணவுப் பொருட்கள் வேகமாகக் குறைந்துள்ளதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அதிக செலவு மற்றும் வெளிநாட்டு போட்டி உள்ளிட்ட காரணங்களால் விக்டோரியா பால் உற்பத்தித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாக பால் உற்பத்தியாளர்களின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.