Sportsதென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (21) இடம்பெற்ற 20-வது லீக்கில் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 399 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் Heinrich Klaasen அதிகபடியாக 109 ஓட்டங்களையும், Reeza Hendricks 85 ஓட்டங்களையும், Rassie van der Dussen 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Reece Topley 3 விக்கெட்டுக்களையும், Gus Atkinson, Adil Rashid ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 400 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 22 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mark Wood அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும், Gus Atkinson 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் Gerald Coetzee 3 விக்கெட்டுக்களையும் Lungi Ngidi, Marco Jansen ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...