Breaking Newsஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

-

ஆஸ்திரேலியாவின் அகதி தஞ்ச விசா பொறிமுறையை வலுப்படுத்த புதிதாக 160 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

அகதி தஞ்சம் கோரி தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுப்பதால் இதை பலர் ஆஸ்திரேலியாவில் தாம் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க பயன்படுத்துவதாகவும், உண்மையிலேயே அகதிகள் அல்லாதவர்களிடம் இருந்து போலி விண்ணப்பங்கள் அதிகளவில் கிடைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலித்து இறுதி முடிவை எடுப்பதற்கு 54 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் எனவும், இது உட்பட பல்வேறு நடவடிக்கைகளிக்கென மொத்தம் 160 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

AAT எனப்படும் Administrative Appeals Tribunal-க்கு 10 கூடுதல் நீதிபதிகள் மற்றும் 10 Federal circuit மற்றும் குடும்ப நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் இதில் அடங்குகின்றது.

போலியாக அகதி தஞ்ச விண்ணப்பங்களை தாக்கல் செய்து நீண்ட வரிசையில் விண்ணப்பங்கள் தேங்குவதற்கு காரணமாக இருப்பவர்களால் உண்மையான அகதிகள் பெறுமளவில் பாதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார்.

புகழிட கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த தகுதியும் இல்லாத விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்ய்யப்படும் அகதி தஞ்ச விண்ணப்பங்கள், அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை உரிமைகளை பெறுவதற்கான ஒரு வழியாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

போலியாக விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்துவிட்டு அதற்கான முடிவிற்காக காத்திருக்கும் காலம் கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின் மீளாய்வுக்கு விண்ணப்பித்த பின்னர் கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள். அதிலும் நிராகரிக்கப்பட்டபின் நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்து அதன் முடிவுக்காக அதிகபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி நேரிடலாம் என்பதால் இதனை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேலை ஆஸ்திரேலியாவில் தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் 2021 முதல் கணிசமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...