உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக 130 ஓட்டங்களை டேரில் மிட்செல் பெற்றதுடன் ரச்சின் ரவீந்திர 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் முகமது ஷமி 05 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 01 விக்கெட்டையும் குல்தீப் யாதவ் இரு விக்கெட்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி 274 ஓட்டங்கள் வெற்றி என்றை வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 95 ஓட்டங்களை பெற்றுதுடன் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 46 ஓட்டங்களையும் Ravindra Jadeja ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.