ஆஸ்திரேலியர்கள் $370 பில்லியனுக்கும் அதிகமாக வரி புகலிடங்கள் என்று அழைக்கப்படும் நாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.
இங்கு, 2020ஆம் ஆண்டு தொடர்பில் தேசிய திறைசேரிக்கு அறவிடப்படவிருந்த 11 பில்லியன் டொலர் வரித் தொகை இழக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், உலகளவில் வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பிரபல நிறுவனங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் வருமானத்தில் 0 முதல் 0.5 சதவீதம் வரை மட்டுமே வரியாகச் செலுத்துவதாகவும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.