எதிர்காலத்தில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வலுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜுலை முதல் செப்டெம்பர் வரையான 03 மாத காலப்பகுதியில் பெற்றோலின் விலை 07 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களால், உலக அளவில் எரிபொருள் விலை கடுமையாகப் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், மத்திய கிழக்குப் போருக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள விரைவான அதிகரிப்பு அவுஸ்திரேலியர்களின் வாழ்க்கை நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.