Sportsபங்களாதேஷை வென்றது தென்னாப்பிரிக்கா - உலக கிண்ண தொடர் 2023

பங்களாதேஷை வென்றது தென்னாப்பிரிக்கா – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக் கிண்ண தொடரில் இன்றைய தென்னாப்பிரிக்கா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணியை 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 382 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் Quinton de Kock 174 ஓட்டங்களையும், Aiden Markram 60 ஓட்டங்களையும், Heinrich Klaasen 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Hasan Mahmud அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 383 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் Mahmudullah 111 அதிகபட்ச ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணி சார்பில் Gerald Coetzee 3 விக்கெட்டுக்களையும், Marco Jansen, Lizaad Williams, Kagiso Rabada ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...