காட்டுத் தீ அபாயம் காரணமாக, குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களை உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
அதில் ஒரு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதாகவும், சுமார் 170 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குயின்ஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் தற்போது 2 காட்டுத் தீ தீவிரமாக பரவி வருவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களை பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்க பல தீயணைப்பு குழுக்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, ஆஸ்திரேலியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட காட்டுத் தீ பரவி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், காட்டுத் தீ அபாயத்தைக் கட்டுப்படுத்த இது போதுமானது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.