கணினி அமைப்பு பிழை காரணமாக, கிட்டத்தட்ட 14,000 மாணவர் கடன் பெற்றவர்கள் தங்கள் கடன் தொகையில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
இது 104 கல்வி நிறுவனங்களில் உள்ள 13,748 மாணவர்களுக்கு பொருந்தும் மற்றும் அவர்கள் வாங்கிய மொத்த கடன் தொகை கிட்டத்தட்ட 74 மில்லியன் டாலர்கள்.
ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகத்துக்கு கல்வித்துறை உரிய நேரத்தில் தகவல் அனுப்பாததால், மாணவர்கள் சிரமப்பட்டனர்.
அதன்படி, அவர்களுக்கு நிவாரணமாக கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்விக்கடன் வட்டி 7.1 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் மாணவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.