Sportsஇலங்கை அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இலங்கை அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (26) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் லஹிரு குமார 03 விக்கெட்டுகளையும் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கசுன் ராஜித தலா 02 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷனா 01 விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.

157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன் Sadeera Samarawickramaவும் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார்.

நன்றி தமிழன்

Latest news

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

மறக்கப்பட்ட $21 மில்லியன் லாட்டரி வெற்றிகள்

21.42 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான இந்த வருடத்திற்கான 24 பிரதான லாட்டரி பரிசுகளை வென்றவர்கள் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. கோரப்படாத பத்து பரிசுகள் $1 மில்லியன்...