ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையை சட்டமியற்றும் ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலமாக ACT ஆனது.
அதன்படி, ஆரோக்கியமான சூழலில் வாழும் உரிமையை மீறும் மக்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.
அந்த உரிமைகள் சட்டமாக்கப்பட்டுள்ள போதிலும், உரிய உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நிவர்த்தி செய்வது உட்பட எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
கூடுதலாக, சுத்தமான காற்று – பாதுகாப்பான காலநிலை – சுத்தமான நீர் அணுகல் மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக கொள்கைகளை உருவாக்குவதிலும், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும், ஆரோக்கியமான சூழலுக்கான மக்களின் உரிமையை பாதுகாக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான சூழலுக்கான உரிமைக்காக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைச்சர் தாரா செய்ன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய சட்டங்கள் காடழிப்பு, கட்டாய நிலத்தை அபகரித்தல், புதைபடிவ எரிபொருட்களை எரித்தல் மற்றும் உயிர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் தாக்கத்தை குறைக்க உதவும்.