அவுஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
மைனேயில் நேற்று இரவு இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்த சம்பவமே துணை ஜனாதிபதியின் இந்த அறிக்கைக்கு உடனடி காரணம்.
அமெரிக்க குழந்தைகளின் மரணத்திற்கு துப்பாக்கிச் சூடுதான் முக்கிய காரணம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் போன்று அமெரிக்காவிலும் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.