விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் உதவியை ஆஸ்திரேலியா பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கும், பிரதமர் அந்தோனி அல்பனீஸ்க்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது நடந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படாத பரந்த நிலத்தை பயன்படுத்தி அமெரிக்க செயற்கைக்கோள்களை வான்வெளியில் அனுப்பும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட விண்வெளி சோதனைகளுக்கு அமெரிக்காவும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் தனது உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு வார இறுதியில் நாடு திரும்பவுள்ளார்.