Newsஇனி பாடங்களில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர்களும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

இனி பாடங்களில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர்களும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

-

தேர்வில் தோல்வி அடையும் பல்கலைக் கழக மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதை தடுக்கும் விதிகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், அன்றைய ஸ்காட் மாரிசன் அரசாங்கத்தால், அவர்கள் படிக்கும் பாடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய பணியாளர்களில் பட்டம் பெற்றவர்களின் சதவீதம் 2050 க்குள் தற்போதைய 36 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மண்டல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி தடைகளை நீக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை வருட இறுதிக்குள் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...