ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து விலகிய அவர் தற்போது பெர்த்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மிட்செல் மார்ஷுக்கு பதிலாக யார் அணியில் இடம் பெறுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதனால் வரும் சனிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பை ஆஸ்திரேலியா இழந்துள்ளது.
கோல்ஃப் மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த கிளென் மேக்ஸ்வெல் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.