News32 மாநில விளையாட்டு நிர்வாகிகள் $11 மில்லியன் சம்பளம் கொடுத்த பொதுநலவாய...

32 மாநில விளையாட்டு நிர்வாகிகள் $11 மில்லியன் சம்பளம் கொடுத்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்

-

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநில நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின்படி, கடந்த நிதியாண்டில் மட்டும் இவர்களுக்காக செலுத்தப்பட்ட தொகை 11 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும்.

மேலும் போட்டியை நடத்துவதற்காக மட்டும் 32 நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவருக்கு 5 இலட்சம் டொலர்களுக்கு மேல் – 11 பேருக்கு 3 இலட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குழுவினருக்கு 180,000 முதல் 2 இலட்சம் டொலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், போட்டியின் உயர் தரத்தை பேணுவதற்காக இவ்வளவு அதிக பணம் செலுத்தப்பட்டதாக நியாயப்படுத்தினார்.

ஆரம்பத்தில் 2.6 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் மொத்தச் செலவு 07 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று கூறி, விக்டோரியா மாநில அரசு ஹோஸ்டிங்கிலிருந்து விலக நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அவர்கள் மேலும் 380 மில்லியன் டாலர்களை காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு இழப்பீடாக செலுத்த வேண்டியிருந்தது.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...