இந்த ஆண்டின் இறுதியில் உயர்த்தப்படும் இணையக் கட்டணங்கள் ஆஸ்திரேலியாவில் சுமார் 5.3 மில்லியன் சந்தாதாரர்களைப் பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வருட இறுதியில் Telstra, Foxtel, Aussie Broadband மற்றும் Optus ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரிப்பதன் காரணமாக வருடத்திற்கு 60 முதல் 120 டொலர்கள் வரை கட்டணம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறைந்த வேக இணைப்புகளைக் கொண்ட சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த நிலையை எதிர்கொள்ளும் வகையில், நுகர்வோர் ஆணைக்குழுவும் பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
பரிந்துரைகளில் பயன்படுத்தப்படும் தொகுப்பு அல்லது இணைய வழங்குநரை மாற்றுதல் மற்றும் அதிக வேக தொகுப்புக்கு மாறுதல் ஆகியவை அடங்கும்.