Sportsஅவுஸ்திரேலியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து - உலக கிண்ண...

அவுஸ்திரேலியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து – உலக கிண்ண தொடர் 2023

-

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களும் இழப்பிற்கு 286 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பில் அதிகப்பட்சமாக Marnus Labuschagne 71 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Chris Woakes 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களும் இழப்பிற்கு 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகப்பட்சமாக Ben Stokes 64 ஓட்டங்களையும், Dawid Malan 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Adam Zampa 3 விக்கெட்டுக்களையும், Mitchell Starc, Josh Hazlewood, Pat Cummins மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...