செப்டம்பர் காலாண்டில் குழந்தை பராமரிப்பு கட்டணம் 13 சதவீதம் குறைந்துள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய 23 பில்லியன் டாலர் வாழ்க்கைச் செலவு நிவாரணப் பொதியே இதற்கு முக்கியக் காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைப்பதன் மூலம், பெண்கள் வேலைக்கு செல்வதால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதாவது ஒரு வகையில் நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படாவிட்டால், குழந்தை பராமரிப்புக் கட்டணம் கிட்டத்தட்ட 7 சதவீதம் அதிகரித்திருக்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.
எரிசக்தி துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக, செப்டம்பர் காலாண்டில் எரிசக்தி கட்டணங்களில் குறைவு காணப்பட்டது.