Newsமொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் ஹோட்டலை அலறவிட்ட நபர்

மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் ஹோட்டலை அலறவிட்ட நபர்

-

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சென்றுள்ளார்.

36 வயதுடைய அவருக்கு ரஷ்ய மொழிதான் பேசத் தெரியும். ஹோட்டலில் தனக்கான உணவு ஒன்றை வாங்க முயற்சிக்கும் போது அவருக்கு அந்த இடத்தின் மொழியான போர்ச்சுகீஸ் மொழி தெரியாததால் மொழிபெயர்ப்பு செயலியை

பயன்படுத்தியிருக்கிறார்.

அந்த ஹோட்டலில் மாதுளை பழச்சாறு ஓர்டர் செய்ய விரும்பியிருக்கிறார். இதற்காக மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தியபோது மாதுளை பழச்சாறுக்கு பதிலாக, அதன் ஆங்கில வார்த்தையான pomegranate-ஐ தவறாக மொழிபெயர்த்து வழங்க, இறுதியில் grenade (கையெறி குண்டு) என்று ஒர்டர் செய்துவிட்டார். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெயிட்டர், கையெறி குண்டு வைத்து மிரட்டுவதாக நினைத்து பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதைதொடர்ந்து ,பொலிஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சுற்றுலா பயணியை கைது செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடமோ, அவர் தங்கியிருந்த அறையிலோ எந்த ஒரு ஆயுதமும் இல்லை. எனவே, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டல் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஹோட்டலில் சோதனை செய்வதற்கு முன்பே அங்கிருந்து வெளியேற முயன்றதால் அவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

100 மில்லியன் டாலர்களை வெல்ல அதிக ஆர்வமாக உள்ள மக்கள்

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பெரிய பவர்பால் டிரா நாளை டிரா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது $100 மில்லியன் வெற்றி, கடந்த வாரம் $50 மில்லியன் பவர்பால் டிரா வெற்றியாளர்...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...

பள்ளி செல்லும் விக்டோரியன் குழந்தைகளின் பெற்றோருக்கு $400 உதவித்தொகை

விக்டோரியா மாநில அரசு, குழந்தைகளின் கல்விச் செலவுகளை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் அறிவிக்கப்பட்ட மாநில பட்ஜெட் திட்டத்தின்படி, இந்த அமைப்பின் மூலம், ஒரு...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம்...

மெல்பேர்ண் மற்றும் சிட்னி வீடுகளின் விலை தொடர்பில் வெளியான நற்செய்தி

"SQM Research" இன் சமீபத்திய Boom and Bust அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வீடுகளின் விலை மேலும் குறையும் என்று...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...