பாகிஸ்தான் கராச்சியில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ என்றழைக்கப்படும் ‘நாகிலேரியா ஃபோலேரி’ ((Naegleria fowler) அமீபா, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இறந்த நோயாளி காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் மொத்தம் 3 பேர் இந்த அமீபாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான டொக்டர்.சாத் காலித், நன்னீர் ஆகாரங்களில் காணப்படும் இந்த அமீபாவிடமிருந்து தங்களைக் காக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அமீபாவால் தாக்கப்படுவது அரிது என்றாலும் இது எளிதில் உயிரைப் பறிக்கக்கூடியது என்பதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அனையவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மக்கள் சுத்தம் செய்யப்படாத, ஒழுங்காக குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி தமிழன்