ஆஸ்திரேலியர்களில் 77 சதவீதம் பேர் தங்கள் உடல் அமைப்பில் திருப்தி அடையவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஆனால், அவர்களின் சொந்த கெட்ட பழக்கங்களான முறைசாரா உணவு, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் இதற்கு காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் அமைப்பு பிரச்சனை மனநல பிரச்சனைகளாகவும், மன அழுத்தம் போன்ற நோய்களாகவும் கூட உருவாகும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்நிலையை தவிர்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஒரு பருமனான நாடாக கருதப்படுகிறது.