உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய பேட்டியில் தென்னாபிரிக்க அணி
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக அஸ்மத்துல்லா உமர்சாய் 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் ஜெரால்ட் கோட்ஸி 44 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், தென்னாபிரிக்க அணி 245 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இதற்கமைய, 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது
அந்த அணி சார்பில் Rassie van der Dussen அதிகபட்சமாக 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மொஹமட் நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த தோல்வியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வௌியேறுகிறது.
நன்றி தமிழன்