2025 ஆம் ஆண்டில், சைபர் கிரைமை எதிர்த்துப் போராடுவதற்கான செலவு 16.5 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சென்டர் தெரிவித்துள்ளது.
இதேவேளை சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சைபர் கிரைமினல்கள் பணம் சம்பாதிப்பதற்காக எந்தவொரு மோசடி செயலையும் செய்ய தயாராக இருப்பதாக அறியப்படுகிறது.
கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை அணுகுவது போன்ற மோசடிகள் இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.
கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட சைபர் குற்றப் புகார்களின் எண்ணிக்கை 76,000ஐத் தாண்டியுள்ளதாக ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு போலி கணக்கு தொடங்குவது பல இணைய குற்றங்களுக்கு உடனடி தூண்டுதலாகும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.