அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான நில பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசுடன் தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தனது ஒப்பந்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தின் பிரகாரம் பெயரிடப்பட்டுள்ள காணிகளில் இது தொடர்பான கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது ஹைட்ரஜன் ஆலையை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்போர்னில் 60 ஹெக்டேர் நிலப்பரப்பில் நீர்மூழ்கி கப்பல் கட்டுமான தளம் மற்றும் பயிற்சி பள்ளி கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த 5 மாதங்களில் இரண்டு அதிகார வரம்புகளின் கீழ் காணி பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலியாவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்திக் கூடத்தை நிறுவியமை பெரும் சாதனையாகும் என பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.
வீடுகளை நிர்மாணிப்பதற்காக 13 ஹெக்டேர் மற்றும் 38 ஹெக்டேர் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் தெரிவித்தார்.