பல மெல்போர்ன் பள்ளிகளின் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் 23ம் தேதி மதியம் 01.30 மணிக்கு நகர் முழுவதும் பல இடங்களில் செயல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த போராட்டம் தொடர்பில் பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் மற்றும் இனவெறி கருத்துக்கள் பதிவாகலாம் என எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, விக்டோரியா மாகாண கல்வித் திணைக்களமும் இந்தப் போராட்டம் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டத்திற்கு விரோதமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் – பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.