Breaking Newsசெல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

-

கடந்த வாரம் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகள் செல்லுபடியாகும் வீசா எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஊடக அமைப்பு ஒன்றின் விசாரணை அறிக்கையின்படி, அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்ட கடிதங்களில் அவர்கள் தற்காலிக அனுமதியின் பேரில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் செல்லுபடியாகும் விசா அனுமதி அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட 83 பேரில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

அவர்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாகவும் குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்தவொரு விசா அல்லது விசா நிபந்தனைகளும் இன்றி கடிதம் மாத்திரம் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினையாக உள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

Latest news

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி...

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...