Sportsஉலகக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது அவுஸ்திரேலியா - உலக கிண்ண தொடர்...

உலகக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது அவுஸ்திரேலியா – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும், சுப்மன் கில் 7 பந்துகளில் 4 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும், விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 09 பந்துகளில் 22 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 107 பந்துகளில் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அணியின் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 107 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

துடுப்பாட்டத்தில் அவஸ்திரேலிய அணி சார்பில் Travis Head அதிகபட்சமாக 137 ஓட்டங்களை பெற்றதுடன், Marnus Labuschagne ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய சார்பில் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் Mohammed Shami 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த உலக கிண்ண தொடரில் இந்திய அணி இதற்கு முன்னர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்றிருந்தாலும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி அவுஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...