Newsஉலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா அழகி தெரிவு

உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா அழகி தெரிவு

-

எல் சல்வடார் நாட்டில் இடம்பெற்ற 72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது. இதில் முதல் 20 பேரில் இந்திய அழகி இடம் பெற்றார். ஆனால் இறுதி 5 பேரில் அவர் தேர்வாகவில்லை.

நிகரகுவா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட பிறகு பட்டத்துக்காக இறுதிச் சுற்றுக்கு நிகரகுவா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா அழகிகள் நுழைந்தனர். இறுதிச் சுற்றில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதன் பின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.

இறுதிச் சுற்றில் ஷெய்னிஸிடம் நீங்கள் மற்றொரு பெண்ணாக ஒரு வருடம் வாழ முடிந்தால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் 18-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து தத்துவாஞானியும் பெண்ணியவாதியுமான மேரி வோல்ஸ் போன்கிராப்டாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். அவர் எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று பெண்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று ஷெய்னிஸ் கூறினார்.

2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை அவுஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள 23 வயதான ஷெய்னிஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மோடல் ஆவார்.

நன்றி தமிழன்

Latest news

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

அமெரிக்கா McDonald’s உணவகங்கள் மூலம் கொடிய பாக்டீரியா தொற்று

அமெரிக்காவில் உள்ள McDonald's உணவகங்கள் மூலம் கொடிய E. coli பாக்டீரியா தொற்று பரவியதால் 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் E. coli நோய்த்தொற்றுகள்...

முதல் முறையாக நிர்வாண மண்டலமாக மாறும் பிரிஸ்பேர்ண் Story Bridge

பிரிஸ்பேர்ணின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரிஸ்பேர்ண் Story Bridge-ஐ நிர்வாண மண்டலமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று நடைபெறுகிறது. உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ஸ்பென்சர் டுனிக்...

குயின்ஸ்லாந்து பிரதமர் பதவியை இழப்பாரா?

குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி லிபரல் கட்சி வெற்றி பெற்று...

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோருக்கு 5 நிலைகளில் ஆலோசனை

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியைத் திட்டமிடுபவர்களுக்கு ஆஸ்திரேலிய கல்வி அமைச்சு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நாட்டில் கல்வி கற்க 5 படி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புத்...