கடந்த வாரம் 02 தடவைகள் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான சரியான தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பீற்றர் டட்டன் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன கடற்படையின் சோதனையின் போது ஆஸ்திரேலிய ராயல் நேவி டைவர்ஸ் குழுவின் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று பல நாட்களாகியும் பிரதமர் அல்பானீஸ் அல்லது தொழிற்கட்சி அரசாங்கமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இது முழு நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் பீட்டர் டட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவின் இராணுவ நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா என்று பிரதமர் அல்பனீஸிடம் அவர் மேலும் கேட்கிறார்.