Cinema38 மொழிகளில் வெளியாகும் 'கங்குவா'

38 மொழிகளில் வெளியாகும் ‘கங்குவா’

-

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி(நடராஜ்) நடிக்கின்றனர்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

சமீபத்தில் கங்குவாவின் இறுதிக்கட்ட படப்படிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், சில காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் விஎஃப்எக்ஸ் பணிகளையே நம்பி உள்ளதால் அதற்கான குழு கடுமையாக உழைத்து வருகிறது. தமிழில் இதுவரை வெளியான படங்களிலேயே சிறப்பான விஎஃப்எக்ஸ் தரம் கொண்ட படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் கங்குவா திரைப்படத்தை உலக முழுவதும் 38 மொழிகளில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...