நியூ சவுத் வேல்ஸ் பிரதமரின் கோரிக்கையை புறக்கணித்து நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிட்னியில் பல இடங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் 12ம் வகுப்பு மாணவர்கள்.
யுத்த மோதல்களினால் கல்வி பறிக்கப்பட்ட சூழலில் காஸாவின் பிள்ளைகள் எப்படி வசதியான வகுப்பறைகளில் கல்வி கற்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.
இருப்பினும், நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ன்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை பள்ளிகளுக்குள் அரசியலைக் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, இன்று மெல்பேர்ன்-அடிலெய்ட் உள்ளிட்ட ஏனைய நகரங்களிலும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.