அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல் படி இதுவாகும்.
அதே நேரத்தில், பல்வேறு சுவைகள் கொண்ட இ-சிகரெட்டுகள் மற்றும் அவற்றில் உள்ள நிகோடின் அளவு பற்றிய புதிய விதிமுறைகளின் தொடர் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.
இ-சிகரெட்டுகளுக்கான பரிந்துரைகளை வழங்க மருத்துவர்களுக்கு இருக்கும் அதிகார முறையிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
ஆஸ்திரேலியாவின் இளம் மக்களில் 1/4 பேர் எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்த ஆசைப்படுவதாகவும், 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் இது ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.