ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
இது செப்டம்பரில் 5.6 சதவீதமாக இருந்தது, பொருளாதார ஆய்வாளர்கள் இது அக்டோபரில் 5.2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளனர்.
இருப்பினும், இன்று புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பணவீக்கம் இன்னும் குறைந்த மதிப்பிற்கு வந்துள்ளது.
அக்டோபரில் வீட்டு விலைகள் 6.1 சதவீதத்தாலும், உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 5.3 சதவீதத்தாலும், போக்குவரத்து கட்டணம் 5.9 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் இந்த நாட்டில் மின் கட்டண அதிகரிப்பு 10.1 வீதமாக பதிவாகியுள்ளது.
மின்சாரக் கட்டணச் சலுகை இல்லாவிட்டால், 18.8 சதவீதமாக இருந்திருக்கும் என்றும் ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த அக்டோபர் மாதத்திற்குள் எரிபொருள் கட்டணம் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.