தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசும் நாஜி சின்னங்கள் மற்றும் வணக்கங்களை பொதுவில் காட்டுவதை தடை செய்ய தயாராகி வருகிறது.
அதன்படி, ஒரு நபர் ஸ்வஸ்திகா மற்றும் பிற நாஜி சின்னங்களை பொதுவில் காண்பித்ததற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டால் $20,000 அபராதம் அல்லது 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால் இது மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திகாவை பாதிக்காது.
விக்டோரியா உட்பட பல மாநிலங்கள் ஏற்கனவே நாஜி சின்னங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியுள்ளன.
மேலும், நாஜி வணக்கத்தை தேசிய அளவில் கிரிமினல் குற்றமாக அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.