Newsஉலகின் 8 வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு

உலகின் 8 வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு

-

தென்கிழக்கு ஆசியாவில் கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக உள்ள அங்கோர் வாட் கோயில், உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அங்கோர் வாட் உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது.

உலகில் அறிமுகமே தேவையில்லாத இடங்களில் இதுவும் ஒன்று. கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில் உலகில் அதிகமான பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

கம்போடியாவின் மையப்பகுதியில் உள்ள அங்கோர் வாட், இத்தாலியின் பாம்பீயைப் பின்னுக்குத் தள்ளி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாம்பீக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைவிட அங்கோர் வாட்டுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம்.

உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கீகாரம் ஆகும். இத்தாலியின் பாம்பீயிடம் இருந்து அந்த இடத்தை அங்கோர் வாட் தட்டப் பறித்துள்ளது.

அங்கோர் வாட் கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இது முதலில் இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கோவிலாகக் கட்டப்பட்டது. பின்னர் புத்த மதத்தின் முக்கிய கோவிலாக மாறியது.

அங்கோர் என்றால் எட்டுக் கைகளையுடைய விஷ்ணுவைக் குறிக்கும். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை கோவில் சுவர்களிலும் சிற்பங்களிலும் காணமுடிகிறது.

நன்றி தமிழன்

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...