விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட மின்சார வாகன வரியைத் திரும்பப் பெற மாநில அரசு தயாராகி வருகிறது.
ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 2.6 சென்ட் வரி விதிக்கப்பட்டது.
ஆனால், இது சட்டவிரோதமானது என கடந்த மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, விக்டோரியா மாநில அரசாங்கம் சாரதிகளுக்கு மீண்டும் கிட்டத்தட்ட 07 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தப் பணம் எத்தனை பேருக்குச் செல்லும் என்பதும், ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொகையும் இன்னும் தீர்மானிக்கப்படாததால், முழு செயல்முறையும் பல மாதங்கள் ஆகலாம் என்று விக்டோரியா மாநில அரசு கூறுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இவ்வளவு வரி விதித்த ஒரே மாநிலம் விக்டோரியா.