நியூ சவுத் வேல்ஸின் புற்றுநோய் நிறுவனம், ஒவ்வொரு மூன்று ஆஸ்திரேலியர்களில் இருவர் தங்கள் வாழ்நாளில் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவார்கள் என்று கூறுகிறது.
மக்கள் நேரடியாக சூரிய ஒளியில் படுவதே இதற்குக் காரணம் எனவும், அவுஸ்திரேலிய இளைஞர் சமூகத்தில் தோல் தொடர்பான தொற்றுக்கள் அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸில் இந்த ஆண்டு இறுதிக்குள் தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 6000 ஆக உயரக்கூடும் என்று சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பாதகமான சூரியக் கதிர்கள் காரணமாக சிகிச்சை பெற வந்த இளைஞர்களின் சதவீதம் கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறுகையில், கடந்த நிதியாண்டில் 800க்கும் மேற்பட்டோர் சூரிய ஒளியில் சிக்கி சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதன் தாக்கம் 05 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கே அதிகம் காணப்படுவதோடு, வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்புக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்துவது முக்கியமாகும்.