Newsஇந்தோனேசிய எரிமலை வெடிப்பு - 11 பேர் பலி, 12 பேர்...

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு – 11 பேர் பலி, 12 பேர் மாயம்

-

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் மாயமாகியுள்ளனர்.

மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் கடந்த 3ம் திகதி எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.

படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், “26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்தவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளோம். அதில் 3 பேர் மட்டுமே உயிருடனுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளன. சாலை மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...