Newsசென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் - அவதியில் மக்கள்

சென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் – அவதியில் மக்கள்

-

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை விட்டு படகுகள் போன்ற ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

இதுகுறித்து, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் கூறுகையில், ‘புயலால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்படும் என எதிா்பாா்க்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் சூழ்ந்த நிலையில், மனைவி, குழந்தை ஆகியோரை படகுகள் மூலம் மீட்டு சகோதரா் வீட்டில் தங்கவைத்துள்ளேன்’ என்றாா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவிடம் கேட்ட போது, தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி தமிழன்

Latest news

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...

ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் robotics

ஆஸ்திரேலியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களை ஊக்குவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு robotics அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, coding வகுப்புகள், electronic tablet மற்றும்...

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவைக் கண்டறிய நடவடிக்கைகள்

துப்பாக்கிச் சூடு மற்றும் வீடு கொள்ளைகளை நடத்துவதற்கு குழந்தைகளைச் சேர்ப்பதாக ஒரு புதிய குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. G7 என்று அழைக்கப்படும் இந்தக் குழுவில்...

விக்டோரியாவில் கால் பகுதி குடும்பங்கள் விரைவில் $100 மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்

விக்டோரியாவின் அடுத்த சுற்று மின் சேமிப்பு போனஸுக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல், சலுகை அட்டை உள்ள சுமார் 900,000...