ஜாஸ்பர் சூறாவளியைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இது கெய்ர்ன்ஸில் இருந்து 960 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இது 03 வகை புயலாகும்.
எவ்வாறாயினும், இது கரையை கடக்கும் முன் 02 வகை புயலாக தரமிறங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலின் தாக்கம் காரணமாக, குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் வரும் புதன்கிழமை வரை பலத்த மழை – காற்று நிலைகளை எதிர்பார்க்கலாம்.
ஜாஸ்பர் புயலால் குயின்ஸ்லாந்தின் உள்நாட்டு விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.