மோசமான ஆசிரியர் பற்றாக்குறையால், விக்டோரியா மாநிலத்தில் உள்ள சில பள்ளிகள் தங்கள் மாணவர்களை வீட்டிலிருந்து படிக்க அறிவுறுத்தியுள்ளன.
பிராந்திய பகுதிகளில் உள்ள பாடசாலைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சுமார் 43 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலை அடுத்த வருடத்திற்குள் மோசமடையலாம் என அதிபர்கள் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களை கவரும் வகையில் விக்டோரியா மாநில அரசால் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை குறிப்பிடத்தக்க வெற்றியை அடையவில்லை.