ஹோபார்ட்டின் கிழக்கு கடற்கரையில் 2,500 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு மாநகர சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோபார்ட்டில் இருந்து 25 நிமிட பயணத்தில் வளர்ச்சியடையாத பகுதியில் இந்த வீடுகளை கட்டுவது திட்டம்.
ஒதுக்கப்பட்ட பகுதி சுமார் இருநூற்று நாற்பது ஹெக்டேர் ஆகும். வீடு கட்டும் திட்டம் முன்னதாக மாநகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த முன்மொழிவு மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதுள்ள பிரச்சினைகளை குறைத்து மீண்டும் பிரேரணை முன்வைக்கப்பட்டு அதற்கு மாநகர சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.