Newsகடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

-

அவுஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிரிபி தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஜோஷ் டெய்லர் என்பவரே மணலில் புதையுண்டு மரணமடைந்தவர்.

அதிகாரிகள் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், பன்றி மாமிசம் சமைக்க தோண்டப்பட்ட குழி அது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவிக்குழுவினர் ஹெலிகொப்டர் வசதியை பயன்படுத்தி, இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், காயங்கள் காரணமாக இளைஞர் ஜோஷ் டெய்லர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவயிடத்தில் பல எண்ணிக்கையிலான மக்கள் காணப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேனுக்கு வடக்கே 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரபலமான பிரிபி தீவு. சம்பவத்தின் போது டெய்லரின் நண்பர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 பேர்கள் கடுமையாக போராடி அந்த குழியில் இருந்து டெய்லரை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் வனப்பகுதி அதிகாரிகளில் சிலர் முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டெய்லரின் உயிர் காக்கும் கருவிகளை வியாழக்கிழமை நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குழிக்குள் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் மீண்டு வருவது கடினமான ஒன்றாக இருக்கும் என்றே மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாகவும், இதுவரை 42,000 அமெரிக்க டொலர் வரையில் உதவி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...