Cinemaநடிகரும் இயக்குநருமான சங்கரன் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான சங்கரன் காலமானார்!

-

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (92) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார்.

1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 படங்களை இயக்கியுள்ளார்.

பொண்டாட்டி தேவை, தாயம்மா, மௌன ராகம், சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம்.

சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் அனுப்பும் விக்டோரியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, இணையத்தில் மிகவும் தனிப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து...

மானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

Centerlink Rent Assistance, வேலை தேடுபவர் மற்றும் பிற அரசாங்க மானியங்களுக்கான கொடுப்பனவுகளின் தொடக்கத்துடன் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கூடுதல் பணத்திற்கான உரிமையைப் பெறுவார்கள். இந்த மாதம்...

ஆஸ்திரேலிய ஆசிரியர்களை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர் நிதி

குயின்ஸ்லாந்து மாநில அரசு, ஆசிரியர்களை தொழிலில் ஊக்குவிக்க 71 மில்லியன் டாலர் நிதியுதவிக்கான திட்டங்களை முன்வைத்துள்ளது. முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் உதவியாக வழங்கப்படும்...

WA சாலை பாதுகாப்பை மேம்படுத்த $32 மில்லியன்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த 32 மில்லியன் டாலர் முதலீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீட்டில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய தோற்றத்துடன் கூடிய...

டிமென்ஷியா நோயாளிகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம்

டிமென்ஷியா நோயாளிகளில் ஐந்து பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடுகள் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு புதிய அறிக்கையின்படி, 2767 வயதானவர்களின் தரவு இந்த ஆய்வுக்கு...

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...