News86 அகதிகளுடன் கடலில் மூழ்கிய படகு – 61 பேர் பலி

86 அகதிகளுடன் கடலில் மூழ்கிய படகு – 61 பேர் பலி

-

லிபியா கடற்கரையில் 86 புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 61 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது.

லிபியாவில் உள்ள ஐ.நாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில், அந்தப் படகு கடற்கரை நகரமான சுவாராவிலிருந்து 86 பேருடன் கிளம்பியதை உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதி உலகின் ஆபத்தான புலம்பெயர்வு வழிகளில் ஒன்றாக தொடர்கிறது என ஐ.நா தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள், லிபியாவின் எல்லை வழியாக புலம்பெயர்கின்றனர். அதில் பலர் கடலில் இதுபோன்ற விபத்துக்களைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆண்டு இறந்துள்ளனர் அல்லது தொலைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை உலகின் மற்ற பகுதிகளில் இதைவிட அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Tattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கழுத்தின் பின்புறம் மற்றும் கைகளில் பச்சை குத்த அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னர் அவர்கள் தமது கடமைகளின் போது உத்தியோகபூர்வ ஆடைகளால் மறைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே...

5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கிடைத்த The Booker Prize

பிரித்தானிய எழுத்தாளர் Samantha Harvey 2024ஆம் ஆண்டுக்கான The Booker Prize-ஐ வென்றுள்ளார். இது அவரது "Orbital" நாவலுக்காக Booker இலக்கிய விருது பெற்ற முதல் விண்வெளி...

எலோன் மஸ்க்குக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பணியை வழங்கியுள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பணியை வழங்கியுள்ளார். "மாநில செயல்திறன்...

4 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு விண்கல் மழை

வருடாந்திர லியோனிட் விண்கல் மழையை அடுத்த வாரம் ஆஸ்திரேலியர்கள் காண வாய்ப்பு உள்ளது. இந்த விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தின் ஊடாக மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில்...

உயிருடன் இருக்கும் கவர்ச்சியான மனிதர் யார் தெரியுமா??

இன்று பீப்பிள் பத்திரிகையால் 2024 ஆம் ஆண்டில் உயிருடன் இருக்கும் மிகவும் கவர்ச்சியான மனிதராக John Krasinski தேர்வு செய்யப்பட்டுள்ளார் . Peoples பத்திரிக்கையின் புதிய அட்டையின்...

4 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு விண்கல் மழை

வருடாந்திர லியோனிட் விண்கல் மழையை அடுத்த வாரம் ஆஸ்திரேலியர்கள் காண வாய்ப்பு உள்ளது. இந்த விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தின் ஊடாக மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில்...