Breaking Newsகேரளாவில் ஒரு பெண்ணுக்கு புதிய வகை கொரோனா

கேரளாவில் ஒரு பெண்ணுக்கு புதிய வகை கொரோனா

-

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெ.என்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான லக்ஸெம்பெர்கில் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ‘ஜெ.என்.1’ வகை கொரோனா, பி.ஏ.2.86 வகையின் திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இப்புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

‘ஜெ.என்.1’ வகையானது வேகமாகப் பரவும் என்பதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமெனக் கூறப்படுவதால், கொரோனா தொடா்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த ஒக்டோபா் 25-ஆம் திகதி சென்ற ஒருவருக்கு அங்கு ஜெ.என்.1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், திருச்சியிலோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலோ கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை.

இந்தச் சூழலில், கேரளத்தில் 79 வயது பெண்ணுக்கு ஜெ.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தன.

‘காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18-ஆம் திகதி ஆா்டி-பிசிஆா் சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், ஜெ.என்.1 வகை தொற்று கடந்த டிச.8-ஆம் திகதி கண்டறியப்பட்டது.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘ஜெ.என்.1’ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

12 வயதில் சொந்த தொழில் தொடங்கிய ஆஸ்திரேலிய சிறுவன்

கார் வாங்க வேண்டும் என்ற கனவை அடிப்படையாகக் கொண்டு புதிய தொழிலைத் தொடங்கிய 12 வயது குழந்தை பற்றிய செய்திகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளன. Blayde Day என்ற...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...