Newsதாவூத் இப்ராஹிம் வைத்தியசாலையில் அனுமதி

தாவூத் இப்ராஹிம் வைத்தியசாலையில் அனுமதி

-

அமெரிக்க மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட தாவூத் இப்ராஹிம் உடல்நிலை சீர்கெட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச காவல்துறையால் உலகெங்கும் “சிகப்பு அலர்ட்” தேடுதல் அறிவிப்பு விடப்பட்டிருக்கும் தாவூத்தின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உடல்நிலை சீர்கெட்டதால், இரு தினங்களுக்கு முன் கராச்சியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாவூத் சிகிச்சை பெரும் தளம் முழுவதும் வேறு எந்த நோயாளியும் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவ் வைத்தியசாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பா (Lashkar-e-Taiba) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் தாக்குதல்களை நடத்திய தாவூத் 1993 மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008 மும்பை தாக்குதல், புனே 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...