Breaking Newsஉலகத் தமிழர் பேரவையை மஹிந்த சந்திப்பு

உலகத் தமிழர் பேரவையை மஹிந்த சந்திப்பு

-

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ்க் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு தான் கடும் அதிருப்தி அடைவதாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சரான கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாரிய அளவானதும், கட்டமைக்கப்பட்டதுமான மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கனேடிய அரசு தடைகளை விதித்தது.

தமிழர்களுக்கு எதிராகப் மேற்கொள்ளப்பட்ட போர்க்

குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்திப் பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் குரல் எழுப்பப்பட்ட பின்னரே இது நடைபெற்றது.

தப்பிப்பிழைத்தவர்கள், குடிசார் சமூக அமைப்புகள், இலங்கையில் உள்ள தமிழர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி முடிவெடுப்பதில் ஏற்பட்ட பாரதூரமான தவறாகும்.

இந்த நடவடிக்கைகள், இந்த அமைப்புகள் மீதும், புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், மிக முக்கியமாகத் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காகச் செயற்படுவதாகவும் இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளன.

இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள், பொறுப்புக்கூறலுக்குத்

தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கும் பலமானதும், சக்திவாய்ந்ததுமான குரலைக் கொண்டுள்ளார்கள்.

அவர்களின் குரலாக இந்த அமைப்புகளின்

நிலைப்பாடுகள் அமையவில்லை. இந்த அமைப்புகளின் தலைமைகளை ஆழ்ந்து சிந்திக்குமாறும், அவற்றின் செயல்களுக்குப் பொறுப்புக்கூறுமாறும் நான் கோருகிறேன் என்றார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...